சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம்; மரபுடைமை ஆர்வலர்கள் அதிருப்தி 

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக-பாஜக கூட் டணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்துக்கு மறைந்த எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று தெரி வித்திருந்தார்.
இதனை வரவேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமருக்கு நன்றிக் கடிதம் எழுதி யிருந்தார்.
ஆனால் வரலாற்று ஆய்வாளர் களும் மரபுடைமை ஆர்வலர்களும் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.
பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட சென்னையின் அடையாளமாக விளங்கும் கட்டடங்களின் பெயரை மாற்றினால் நூற்றாண்டுகால கட்டடக் கலையின் வரலாறு அழிக்கப்பட்டுவிடும் என்று அவர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.
கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு மன்றத்தின் தலை வரான ஆர். கோமகன், பாரம்பரிய கட்டடங்களுக்கு தற்போதைய அரசியல்வாதிகளின் பெயர் சூட்டு வது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று கூறி யுள்ளார்.
“உதாரணமாக, சென்னை ரிப்பன் கட்டடத்துக்கு மறைந்த அரசியல்வாதியின் பெயர் சூட்டப் படலாம். புனித ஜார்ஜ் கோட்டை என்று அழைக்கப்படும் ‘ஃபோர்ட் செயின்ட் ஜார்ஜ்’ பெயரும் மாற்றப்படலாம்,” என்று கூறிய அவர், இதனால் அக்கட்டடத்தோடு பின்னிப்பிணைந்துள்ள வரலாறு அழிந்துவிடும் என்றார்.
சென்னையில் கடற்கரையோரம் அமைந்துள்ள ‘புனித ஜார்ஜ் கோட்டை’ இந்தியாவிலேயே பிரிட் டிஷ்காரர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை எனக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள தெரு, இடத்தின் பெயரை வேண்டுமானால் அரசாங்கம் மாற்றிக்கொள்ளட்டும். ஆனால் பாரம்பரிய கட்டடத்துக்கு தற்கால அரசியல்வாதிகளின் பெயரைச் சூட்டுவது தவறு என்றும் அவர் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தளம் குறிப்பிட்டது.
இந்திய தேசிய கலைகள், கலாசார மரபுடைமை அறக் கட்டளையின் சென்னை பிரிவைச் சேர்ந்த சுஜாதா சங்கர், ஓர் இடத் துக்கு அல்லது கட்டடத்துக்கு ஏன் ஒருவருடைய பெயர் சூட்டப் பட்டது என்பதற்கு காரணம் உள்ளது. அத்தகைய பெயர்கள்  வரலாற்று நிகழ்வுகளைத் தாங்கி நிற்கின்றன. அப்படிப்பட்ட பெயர் களை மாற்றி வரலாற்று சின்னங் களின் பின்னணியை அழிக்கக் கூடாது,” என்றார்.
இதற்கிடையே பாரம்பரிய கட்ட டங்களின் பெயர்களை மாற்றுவது தமிழகத்தில் மிகவும் எளிது என்று அரசுத் தரப்பு தகவல்கள் தெரி விக்கின்றன.
அரசாங்க உத்தரவு அல்லது சட்டமன்றத் தீர்மானத்தின் மூலம் பெயரை மாற்றிவிடலாம் என்று அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பெரம்பலூரைச் சேர்ந்த தாய் ஒருவர் 20  ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் மணிகண்டனை(நடுவில்) கண்டுபிடித்த தாய் இந்திரா (இடது). வளர்ப்புத் தந்தை அபிபுல்லா (வலது).

15 Oct 2019

‘20 ஆண்டுக்குப்பின் தந்தையின் தோற்றத்தை வைத்து மகனைக் கண்டுபிடித்த தாய்’

கைதான நால்வரில் ஒருவரான பிரவீன்குமாா் ஐஏஎஸ் தோ்வு எழுதுவதற்காக கோவையில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளாா். பூபதி பொறியியல் பட்டதாரி ஆவாா். இவர்கள் அச்சடித்து புழக்கத்தில் விட வைத்திருந்த ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 கள்ள நோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன.
படம்: ஊடகம்

15 Oct 2019

கள்ளநோட்டை புழங்கவிட்ட கும்பல் தலைவன் வாக்குமூலம்