கூட்டத்திற்குள் புகுந்த கார்: மூவர் பலி

கூட்டத்திற்குள் புகுந்த கார்: மூவர் பலி

1 mins read

பெரம்பலூர்: பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் மூவர் பலியாகினர். இருவர் பலத்த காயமடைந்தனர். சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குப் பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்த போது பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அசுரவேகத்தில் வந்த கார் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.