கனலரசன்: எனது தந்தை காடுவெட்டி குரு மரணத்துக்கு தக்க பதிலடி தரப்படும்

கனலரசன்: எனது தந்தை காடுவெட்டி குரு மரணத்துக்கு தக்க பதிலடி தரப்படும்

1 mins read

சென்னை: பாமகவின் மூத்த தலைவராக இருந்த எனது தந்தை காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானது அல்ல. இந்த மரணத்துக்கு காரணமான பாமக தலை மைக்கு வன்னியர் சமுதாயம் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று காடுவெட்டி குருவின் மகன் கனலரசனும் அவரது குடும்பத்தினரும் ஆவேசத் துடன் கூறியுள்ளனர். பாமகவின் முன்னணித் தலைவராகவும் மாநில வன் னியர் சங்கத் தலைவராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாகக் காலமானார்.

ஆனால் குருவின் மறை விற்குப் பின்னால், பாமக தலை மையின் பங்கு இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், அவரது சகோதரி மீனாட்சி, தாய் ஆகியோர் கூட்டாக நேற்று சென்னையில் செய்தி யாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, "பாமக தலைமையை நம்பி இருந்த எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையான தல்ல. 'ஸ்லோ பாய்சன்' கொடுக்கப்பட்டதற்கான ஆதா ரம் உள்ளது. வன்னியர்கள் பாமகவுக்கு இந்தத் தேர்தலில் பதில் சொல்லுவார்கள்.