குளிரூட்டி, குளிர்பதனப் பெட்டி இலவசமாகத் தரலாம் என மக்கள் எதிர்பார்ப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது குளிரூட்டி, குளிர் பதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் போன்ற வற்றில் ஏதேனும் ஒன்றை இலவச மாக வழங்குவதாக ஆளும் கட்சி யினர் அறிவிப்பு வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது.
தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் 60 லட்சம் தொழிலாளர்களின் குடும் பங்களுக்குச் சிறப்பு நிதியுதவியாக தலா ரூ.2,000 வழங்கப்படும் என அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 
ஊராட்சி செயலர்கள் வாயிலாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அந்தப் படிவத்தில் விண்ணப்ப தாரரின் வீட்டில் டிராக்டர், இயந்திர மீன்பிடிப் படகு, குளிர் பதனப் பெட்டி,  குளிர் சாதன வசதி,  துணி துவைக்கும் இயந்திரம், இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கால்நடைகள் போன் றவை உள்ளதா என்ற விவரம் கேட்கப்பட்டுள்ளது. 
ஏற்கெனவே திமுக ஆட்சியில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்பட்டது.