காங்கிரஸ் போட்டியிடும் 9ல் நான்கு தொகுதிகள் உறுதி

சென்னை: விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. எந்தப் பக்கம் திரும்பினாலும் அரசியல் கூட்டணி பற்றியும் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்துமே பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கிய ஒன்பது இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 4 தொகுதிகள் உறுதியாகி உள்ளது. 
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு 40 இடங்களில் 20 தொகுதிகளை வழங்கியுள்ளது திமுக. அதில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இப்போது நான்கு தொகுதிகள் உறுதியாகி உள்ளன. 
இந்நிலையில், இந்த 9 தொகுதிகள் எவை என்பதை கண்டறிவதற்காக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சென்னை அண்ணா அறி வாலயத்திற்கு வந்து துரைமுருகன் தலைமையிலான  திமுக குழு வினரைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது சிவகங்கை, கன்னி யாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது உறுதியானது.

தமிழகத்தில் நடைபெற உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்றது. கட்சியின் செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன் ஆகி யோர் உடனிருக்க இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. படம்: ஊடகம் 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அண்மையில் ஒரு நாள், தன் மகன் கதிர் ஆனந்தையும் மருமகளையும் வாழ்த்தி ஆசீர் வதித்த தந்தை துரை முருகன். படம்: ஃபேஸ்புக்

20 Jul 2019

துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்

20 Jul 2019

போலிசாரின் பொதுத்தொண்டு