20 ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்து பெண்கள் முற்றுகை போராட்டம் 

பெரம்பூர்: தண்டையார்பேட்டையில் உள்ள டிடிவி தினகரன் எம்எல்ஏ அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 20 ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்தனர். 
“20 ரூபாய் நோட்டு டோக்கன் இங்கே உள்ளது. வாக்குக்குத்  தருவதாக சொன்ன பணம் எங்கே?” எனக் கேட்டு பெண்கள் கோஷமிட்டனர்.
பின்னர் கையில் இருந்த 20 ரூபாய் நோட்டுகளை எம்எல்ஏ அலுவலகத்தில் வீசி எறிந்தனர். இதனால் அங்கிருந்த டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் நைசாக நழுவிச் சென்றுவிட்டனர்.