எடப்பாடி ஆட்சி நீடிக்குமா: 18 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக=திமுக நேரடிப் போட்டி

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட அதேநேரம் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைக்கான வாக்குப்பதிவு டன் சேர்த்து இந்த 18 தொகுதிகளிலும் சட்டமன்றத்திற்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்த 18 தொகுதிகள்தான் தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள அதிமுக அரசாங்கத்தின் தலைவிதியை நிர்ண யிக்கப்போவதாக அரசியல் கவனிப்பாளர் கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சட்டமன்றத்தில் 213 உறுப்பினர்கள் உள்ளனர். 
18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்ததும் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 231 என்ற கணக்கிற்கு வரும். அப்போது ஆட்சியில் இருப்ப தற்குத் தேவையான பெரும்பான்மை உறுப்பினர் எண்ணிக்கை 116 ஆக உயரும். 

அதிமுகவுக்கு சபாநாயகர் நீங்கலாக 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆட் சியைத் தக்கவைத்துக்கொள்ள அக் கட்சி குறைந்தபட்சம் எட்டு தொகுதி களில் வெற்றிபெற்றாக வேண்டும். அது அவ்வளவு சுலபமானதாகத் தெரிய வில்லை. காரணம், 18 தொகுதிகளிலும் அதிமுக வெற்றியைத் தடுத்து நிறுத்த டிடிவி தினகரன் தன்னாலான அனைத் தையும் செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அதனால்தான் கூட்டணிக் கட்சிக ளின் தயவை அதிமுக நாடியுள்ளது. மிகவும் முரண்டு பிடித்த தேமுதிக வைக்கூட விட்டுவிடாமல் நேற்று முன் தினம் இரவோடு இரவாக கூட்டணிக் குள் இழுத்துப்போட்டு உள்ளது அதிமுக தலைமை. நான்கு மக்களவை தொகுதி கள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உடன் பாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிகள் எதுவும் அக் கட்சிக்குத் தரப்படவில்லை. மற்ற கூட் டணிக் கட்சிகளுக்கும் மக்களவைத் தொகுதிகள் மட்டுமே தரப்பட்டுள்ளன.

காரணம், ஆட்சியில் நீடிக்கும் நோக் குடன் அத்தனை தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே போட்டியிட உள்ளனர். 
இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி யோடு சட்டமன்றத்தில் 97 உறுப்பினர் களைக் கொண்டு உள்ள திமுகவும் கூட்டணி கட்சியினருக்கு இடம் தரா மல் தனது வேட்பாளர்களையே நிறுத்த உள்ளது. இதனை அக்கட்சியின் தலை வர் மு.க. ஸ்டாலின் நேற்று அதிகார பூர்வமாக அறிவித்துவிட்டார். 
18 தொகுதிகளில் வென்றால்கூட 115 எம்எல்ஏக்களையே திமுக கூட்டணி பெறும். அப்போது டிடிவி தினகரன் ஆதர வோடு ஆட்சி அமைக்கலாம் என்பது திமுக வின் கணக்கு. அரவக்குறிச்சி, ஓட்டப் பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதி களுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
21 தொகுதிகளிலும் தினகரனின் ஆதர வுடன் அதிமுகவைத் தோற்கடிக்க திமுக திட்டம் தீட்டி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே 18 சட்டமன்றத் தொகுதிகளை உள் ளடக்கிய வேலூர், தருமபுரி, தேனி மாவட் டங்களில் போட்டி கடுமையாக இருக்கும்.

தேமுதிகவுடன் நேற்று முன்தினம் இரவு நட்சத்திர விடுதியில் கையெழுத்தான ஒப்பந்தம். படம்: தமிழக ஊடகம்