திமுகவே அதிக இடங்களில் வெல்லும்: தேர்தல் கருத்துக் கணிப்பு

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் நாடு முழுவதும் பல்வேறு விதமான கருத்துக் கணிப்புகள் நடத்தப் பட்டு வருகின்றன. அண்மைய கணிப்பு ஒன்றில் தமிழகத்தில் அதிமுகவைவிட திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன. இம்முறை திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் பலமான கூட்டணியுடன் களம் காண்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் கள நிலவரம் தொடர்பாக இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் ஊடகங்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளன. இதற்காக 38,600 பேரிடம் 193 நாடாளுமன்றத் தொகுதிகளில் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளனர்.

இது கடந்த மார்ச் 1 முதல் 7-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கணிப்பாகும். இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 
அதன்படி இம்முறை நாடாளு மன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக 16 இடங்களில் வெற்றி பெறும் என இக்கணிப்பு தெரிவிக் கிறது. கடந்த முறை 37 இடங் களைக் கைப்பற்றிய அதிமுகவுக்கு இம்முறை 12 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
மற்றொரு ஆச்சரியத் தகவ லாக டிடிவி தினகரனின் அமமுக 2 தொகுதிகளையும், பாமக 2 இடங்களையும், இதர கட்சிகள் தலா மற்ற இடங்களில் வெற்றி பெறும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் தெரி விக்கின்றன.

அதேசமயம் இம்முறையும் தேமுதிகவுக்கு ஓரு தொகுதியில் கூட வெற்றி கிட்டாது எனவும் இக்கணிப்பு கூறுகிறது.
இந்த முடிவுகள் அரசியல் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள போதிலும், சம்பந்தப்பட்ட கட்சி களின் முக்கிய நிர்வாகிகள் இது குறித்து அதிகம் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை.
பல்வேறு கருத்துக் கணிப்புகள் பெரும் சறுக்கலை சந்தித்திருப் பதை அந்த நிர்வாகிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.