அடுத்த ஆட்சியாளர்களை தீர்மானிக்கப் போவது 2.65 கோடி இளையர்கள்

சென்னை: ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 2.65 கோடி இளம் வாக்காளர்கள் வாக்களிக்க உள் ளனர். இந்த இளையர்களே நாளைய ஆட்சியாளர்களை தீர்மா னிக்கப் போகும் சக்தி என அரசி யல் கவனிப்பாளர்கள் கூறுகின் றனர்.
ஆகக் கடைசியாக வெளியிடப் பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 13 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரத்து 400 பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 944 பேர்.

ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண் ணிக்கை சுமார் 6 லட்சம் அதிக மாகும்.
“மொத்தம் உள்ள 6 கோடி வாக்காளர்களில் சுமார் 50 விழுக் காட்டினர் இளையர்கள். இவர்க ளில் 18 முதல் 19 வயதுக்குட் பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 98 ஆயிரத்து 759 பேர் ஆவர்.
“இவர்கள் நடப்புத் தேர்தலில் தான் முதன் முறையாக வாக்க ளிக்க உள்ளனர். இவர்கள் தங்க ளுக்கு உள்ள அரசியல் ஆர்வம், அறிவு ஆகியவற்றின் அடிப்படை யில் தங்களுடைய பிரதிநிதிகளை தேர்வு செய்ய உள்ளனர்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாய் கடித்ததால் மருத்துவ மனையில் பலரும் சிகிச்சை பெற்றனர். 62 பேரைக் கடித்துக் குதறிய தெருநாய் கடைசியில் அடித்துக் கொல்லப்பட்டது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

நாய் 62 பேரைக் கடித்ததால் வந்த வினை: பலரும் பரிதவிப்பு, முற்றுகை, வாக்குவாதம் 

சிலம்பம் இந்தியாவின் புராதன தற்காப்-புக் கலை என்றும் அதன் தோற்றுவாய் தமிழ்நாடு என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்

21 Apr 2019

சிலம்பத்துக்கு அங்கீகாரம் வழங்க கேட்டு நீதிமன்றத்தில் மனு