தேர்தல் அதிரடி: 60 ரவுடிகள் கைது, 50 லட்சம் ரூபாய் பறிமுதல்

திருவாரூர்: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக 60 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். 
இவர்கள் அனைவருமே ரவுடிப் பட்டியலில் இருப்பவர்கள் என்று காவல்துறை உறுதி செய்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் சோதனைச் சாவடி கள் அமைக்கப்பட்டு கண் காணிப்புப் பணியும் தீவிரப்படுத் தப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந் துள்ளது. அண்மைய சில தேர் தல்களில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்ததை அடுத்து, தேர்தல் ஆணையம் நடத்தை விதிமுறைகளை சற்றே கடுமையாக்கி உள்ளது.
அதன்படி வாகனங்களில் ஆவணங்கள் ஏதுமின்றி பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படு கின்றனவா, வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை எல் லாம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலிஸ் சிறப்புக் குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளன.