விஜயகாந்த் நேரடி பிரசாரத்தில் ஈடுபடுவார் என மகன் தகவல்

சென்னை: தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக, தேமுதிக இடையே கடந்த பல நாட்களாக நீடித்து வந்த பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து அதிமுக கூட்டணி யில் தேமுதிகவுக்கு நான்கு நாடா ளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.
இதனால் தேமுதிகவினர் உற் சாகம் அடைந்துள்ளனர். கூட் டணி இறுதி செய்யப்பட்டுள்ள தால் அவர்கள் பிரசாரப் பணி களைத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாகப் பிரசாரம் மேற்கொள்வார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இம்முறை அதிமுக கூட்டணி யில் பாஜக, பாமக, தேமுதிக உள் ளிட்ட பல கட்சிகள் இணைந் துள்ளன. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் திமுக அணியிலும் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இரவு வரை அதிமுக, தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. எனினும் ஞாயிறு மாலை நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது தலைமைத் தேர்தல் ஆணையம். இதையடுத்து காட்சிகள் மாறத் துவங்கின. அடுத்த அரைமணி நேரத்திலேயே இரு தரப்புக்கும் தொகுதிப் பங்கீடு தொடர்பான உடன்பாடு ஏற்பட்டது.