பேராசிரியை நிர்மலா தேவியை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அருப்புக்கோட்டை தேவாங்கர்  கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. 
அவர், மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக, ஒரு மாணவியிடம் பேசும் ஆடியோ வெளியானது. 
அந்த ஆடியோவின் அடிப் படையில் நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 
இதுதொடர்பான வழக்கை சிபி சிஐடி காவல்துறையினர் விசா ரித்து வருகின்றனர்.
இதுதொடர்பான, வழக்கு திரு வில்லிப்புத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. சுமார் 200 நாட்களுக்கும் மேலாக நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் இருந்துவருகிறார். 
நிர்மலா தேவிக்கு பிணை வழங்கக் கோரி, மதுரை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக் கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 
நேற்றைய விசாரணையின் போது, நிர்மலா தேவிக்கு பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக் கிறீர்களா? என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நிர்மலா தேவிக்கு பிணை வழங்குவதில் எந்த ஆட்சேப ணையும் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
அதனையடுத்து, இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக ஊட கங்களிடம் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் நிர்மலா தேவிக்கு பிணை வழங்கி நீதிபதி தண்ட பாணி உத்தரவிட்டார்.