‘சித்திரை திருவிழாவின்போது தேர்தலை  நடத்த எப்படி ஒப்புதல் வழங்கப்பட்டது’

மதுரை: மதுரையில் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதி மன்ற மதுரைக் கிளை, அதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் விளக் கம் பெற்று பதிலளிக்க உத்தர விட்டுள்ளது. 
தமிழகத்தில் மக்களவை தேர் தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் காலகட்டத்தில், மதுரையில் சித்தி ரைத் திருவிழா நடைபெறுகிறது. அப்போது பாதுகாப்பு அளிப்பதிலும் சிக்கல் ஏற்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டது. எனவே மது ரையில் மட்டும் தேர்தலை ஒத்திவைக்கக்கோரிய மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தேர்தலை ஒத்திவைக்க முடி யாது எனத் தேர்தல் ஆணையத் தின் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப் பட்டது. நெரிசல்மிகு சித்திரை திருவிழாவின்போது மதுரையில் தேர்தலை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் தடையில்லாச் சான்று வழங்கியது எப்படி? என்றும் வினவினர்.