திமுகவின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

சென்னை: அரவக்குறிச்சி, ஒட்டப் பிடாரம், திருப்­பரங்குன்றம் தொகு திகளுக்கு நாடாளுமன்றத் தேர்த லு­டன் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என்று  திமுக வைத்த முறையீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றது, வெள்ளிக் கிழமை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருவாரூர், திரு ஏ.கே.போஸ் மறையொட்டி திருப் பரங்குன்றம் ஆகிய இரு தொகுதி­களும், ஓசூர் சட்டமன்ற உறுப்­பினர் பாலகிருஷ்ண ரெட்டி தகுதி இழப்புக் காரணமாக அந்தத் தொகுதியும் சேர்ந்து 21 தொகு திகள் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்­பட்டது. ஆனால் திடீரென 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்­தேர்தல் என அறிவிப்பு வெளி­யானது. 
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்­பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேர்தலை நடத்தக்கூடாது என்று எவ்வித உத்தரவும் தேர்தல் ஆணை யத்திற்குப் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மூன்று தொகுதி களுக்கான தேர்தலையும் நாடாளு மன்றத் தேர்தலு­டன் சேர்த்தே நடத்த வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நேற்று மனு அளிக்கப்பட்டது.