குண்டர் சட்டத்தின் கீழ் நால்வர் தடுத்து வைப்பு

தமிழகத்தை உலுக்கி வரும் பொள்ளாச்சி இளம் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கு தமிழக காவல்துறையிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 
சம்பவம் தொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் களில் கைது செய்யப்பட்ட சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகிய நால்வர் மீதும் நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. 
இவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி யில்  கல்லூரி மாணவிகளிடம் சமூகவலைத் தளங்கள் மூலம் பழகி அவர்களை மயக்க வார்த்தைகளால் வளைத்துள்ளனர். பின்னர் அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து அதனை காணொளிகள் எடுத்து, அந்த மாணவிகளை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம், நகை ஆகியவற்றைப் பறிப்பதைத் தொழிலாகச் செய்து வந்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் புகார் தெரிவிக்க முன் வராததால் இவர்களின் அட்டகாசம் நீடித்து வந்துள்ளது.
இந்தக் கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இது தொடர்பான அதிர்ச்சிகர மான தகவல்கள் வெளியாகியுள்ளன.  
கடந்த மாதம் 24ஆம் தேதி பொள்ளாச்சி யைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியைக் காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி அதனைக் காணொளியாக எடுத்துள்ளனர். அவர்களி டம் இருந்து தப்பித்த அந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவித்தார்.
இதையடுத்து பொள்ளாச்சி கிழக்குக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் காவல்துறையினர் கைது நடவடிக் கையைத் தொடங்கினர்.
இந்தக் கும்பலால் கடந்த ஆறு ஆண்டு களில் பொள்ளாச்சியில் மட்டும் 60க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அம்பல மானால் தங்களின் எதிர்காலம் நாசமாகிவிடும் என்ற அச்சத்தில் எந்தவொரு பெண்ணும் புகார் அளிக்கவோ தங்களின் குடும்பத்தி னரிடம் பகிரவோ முன்வரவில்லை.
இதனைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட இந்தக் கும்பல், தங்கள் கட்ட மைப்பை விரிவுபடுத்தி, காணொளியில் உள்ள பெண்களை மிரட்டி பொள்ளாச்சியில் உள்ள அரசியல்வாதிகள் சிலருக்கு அவர் களை அனுப்பி உள்ளனர். அதற்குக் கைமா றாக அவர்களிடமிருந்து பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது.
இவர்கள் மாணவிகளை  பாலியல் ரீதி யாக துன்புறுத்தும் சில காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.  அதனால், பாதிக்கப்பட்ட இளம்பெண் தொடர் பான காணொளியைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியாளர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.