"நம்மை ஆளப்போவது யார்? யாரிடம் ஆட்சியைக் கொடுக்க வேண்டும்? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது? இதுவரை அவர்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள்? இவற்றை அலசி ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும். வாக்குப் போடும் முன் தெளிவாகச் சிந்தித்து நல்லவர்களுக்கு வாக்குப் போடுங்கள், முக்கியமாக வாக்குப் போடாமல் இருந்து விடாதீர்கள்," என்று விஜய் சேதுபதி தேர்தல் ஆணையத்தின் விளம்பரத்தில் கூறியுள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என்றும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வாக்களிப்பதன் அவசியம் பற்றியும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையம் விளம்பரப் படத்தை வெளியிட்டுள்ளது.
'மக்கள் செல்வன்' என்று போற்றப்படும் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த விளம்பரப் படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

