பாலியல் கொடூரம்: தமிழக அரசை நெருக்குகிறது மகளிர் ஆணையம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என விளக்கம் அளிக்குமாறு இந்தியாவின் தேசிய மகளிர் ஆணையம் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.
 இது தொடர்பாக தமிழக தலைமை போலிஸ் அதிகாரியான டிஜிபிக்கு ஆணை யம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தமிழகப் பெண்களின் பாதுகாப்பு மீது ஆணையம் அக்கறை கொண்டிருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம்பெண்களைச் சீரழித்த குற்ற வாளிகளுக்கு எதிராக சட்டதிட்டங் களுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் பரிந் துரை செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை மயக்கி, பாலியல் வன் கொடுமை செய்து, அதனை காணொளி எடுத்து மிரட்டிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய நால் வர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நால்வர் மட்டுமின்றி 20 பேர் கொண்ட கும்பல் கடந்த ஏழாண் டுகளாக பாலியல் வன்கொடுமையில் ஈடு பட்டு வந்ததாகவும் கோடிக்கணக்கான ரூபாய் பணம், அரசியல் பிரமுகர்களின் தொடர்பு ஆகியன அதன் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் இந்திய அளவில் பெரி தாகச் பேசப்பட்டு வருவதைத் தொடர்ந்து இந்த பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. 
யார் எந்தத் தகவல் கொடுத்தாலும் அதனை கருத்தில் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் எது உண்மையோ அதன் அடிப்படையில் விசாரணை நடை பெறும் என்றும் சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் தெரிவித்தார். ஸ்ரீதரும் சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபனும் நேற்று பொள்ளாச்சி சென்று தங்களது விசாரணையைத் தொடங்கினர். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களைச் சந்திக்கவும் கொடூரங்கள் நிகழ்த்தப்பட்ட இடங்களைப் பார்வையிடவும் இந்த அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது