கால்வாய்க்குள் பாய்ந்த கார்: ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி

தமிழ்நாட்டின் பொள்ளாச்சி-பழனி நெடுஞ்சாலையில் நேற்று அதி காலை நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மாண்டனர். உயிரிழந்தோரில் இரு குழந்தைகளும் அடங்கும். அவர்கள் சென்ற கார் கெடிமேடு என்னும் பகுதியிலிருந்த குறுகிய பாலத்தைக் கடந்தபோது கட்டுப் பாட்டை இழந்து அருகிலிருந்த கால்வாயில் தலைகுப்புற விழுந் தது. தண்ணீருக்குள் கார் மூழ்கிய போது அதன் தானியங்கிக் கதவுகளைத் திறக்க இயலாத தால் உள்ளே இருந்த அத்தனை பேரும் மூச்சுத் திணறி மாண்ட னர். அதிகாலை 3 மணியளவில் அப்பகுதியில் சென்ற சில காரோட்டிகள் விபத்தை அறிந்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரி வித்தனர். விரைந்து சென்ற பொள்ளாச்சி தீயணைப்புப் படை யினர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி தண்ணீரிலிருந்து காரை வெளியேற்றினர். ஆறு சடலங்களும் உடற்கூறாய்வுக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இவ்விபத்தில் எட்டுப் பேர் மாண்டதாக சில ஊடகங்கள் குறிப்பிட்டன.