சுடச் சுடச் செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு  சிபிஐக்கு மாற்றப்பட்டது

பொள்ளாச்சியில் பாலியல் வன் கொடுமை வழக்கு பூதாகரமாகியுள்ள நிலையில், தன்னை மூன்று ஆண்டுகளாக பாலியல் வன் கொடுமை செய்ததாக மேலும் ஒரு பெண்  அளித்த புகாரில் இன்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏற்கெனவே நான்கு பேர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் வேளையில் பாலா என்பவரை போலிசார் நேற்று கைது செய்தனர். 
தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், ரிஷ்வந்த் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வழக்கில் பல முக்கிய புள்ளிகள், அரசியல் தலைவர்களின் தலையீடு உள்ள தாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள் ளது. 
முன்னதாக இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவு விசாரித்து வந்தது. 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்களும் கைதுசெய்யப்பட வேண்டும் என வலி யுறுத்தி சென்னை பூந்தமல்லியில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களையும் மாணவர்களையும் அப்புறப்படுத்தும் போலிசார். படம்: இணையம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon