'சைகை'யில் பேசிய விஜயகாந்த்

'சைகை'யில் பேசிய விஜயகாந்த்

2 mins read
03f4db0f-94c4-423f-af51-ff88564ff523
-

சென்னை: தேர்தலில் தங்களது பலத்தைக் காட்டத் தயாராகி வரும் தொகுதிகளில் தகுந்த வாக்காளர்களை நிறுத்துவதற்கு தேமுதிக நேற்று நேர்காணல் நடத்தியது. அப்போது, தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த வர்களிடம் நேர்காணல் நடத்திய விஜயகாந்த் 'சைகை' மொழியில் கேள்வி எழுப்பியதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். சைகை மொழி சிலருக்கு புரிந்தும் சில வேட்பாளருக்கு புரி யாமலும் குழம்பி நின்றுள்ளனர். அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் தேமுதிக வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்களுக் கான நேர்காணல் சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. புதுச்சேரி உட்பட 40 தொகுதி களிலும் போட்டியிட விருப்பமனு அளித்த 300க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர். அவர்களை ஒரே இடத்தில் மொத்தமாக அமரவைத்து விஜய காந்த் நேர்காணல் நடத்தினார். தேர்தலில் நின்றால் எவ்வளவு செலவு செய்வீர்கள் என ஆள் காட்டி விரலையும் கட்டை விர லையும் காட்டி, சில்லரையைச் சுண்டுவதுபோல செய்கை காட்டி விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். அதற்கு விருப்பமனு அளித்த வர்கள் பதில் அளித்தனர். மற்றபடி விஜயகாந்த் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. சில ரைப் பார்த்து விஜயகாந்த் ஏதோ ஆர்வமுடன் பேசமுயன்றார். ஆனால், விஜயகாந்த் பேசியதை புரிந்துகொள்ள முடியாமல் பலர் அதிர்ச்சி அடைந்தனர். இதைப் பார்க்கும்போது, விஜய காந்த் உடல்நலம் முழுமையாகத் தேறியதாகத் தெரியவில்லை. எனவே தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே விஜயகாந்த்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று காலை சந்தித்துப் பேசினார். தேர்தல் களப்பணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: இணையம்