தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்க்கு தெரியாமல் மகனின் சிறுநீரகம் திருட்டு

2 mins read

மதுரை: மதுரையில் தனது மகனை ரத்தம் கொடுப்ப தற்காக அழைத்துச்சென்ற தந்தை ஒருவர் அவ னுடைய சிறுநீரகத்தையே அறுவை சிகிச்சை செய்து எடுக்கச் செய்துள்ள நிலையில், மகனின் சிறுநீர கத்தை தாயார் திருடிவிட்டதாக புகார் அளித்துள்ளார். மதுரையில் 17 வயது வாலிபரின் சிறுநீரகத்தைத் திருடிய மருத்துவர் மீதும் அதற்கு துணையாக இருந்த இளையரின் தந்தை மீதும் மதுரை காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஷக்கீலா பானு, புதூர் காவல் நிலையத்தில் தனது மகனின் சிறுநீரகத்தைத் திருடி விட்டதாக புகார் அளித்துள்ளார். "தனது 17 வயது மகனின் சிறுநீரகத்தைச் சாஸ்தா மருத்துவமனையைச் சேர்ந்த பழனிராஜன் என்ற மருத்துவரும் தனது கணவர் ப‌ஷீரும் அவரது நண்பர் ராஜ் மொஹமத்தும் அனுமதியில்லாமல் திருடியுள்ளனர். இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று புகார் தெரிவித்துள்ளார். . துணை ஆணையர் லில்லி கிரேஸ், ஷக்கீலா பானுவிடம் விசாரித்தபோது, "உடல்நலம் குன்றிய நபருக்கு ரத்தம் கொடுக்கவேண்டும் என்றுதான் தனது மகனைச் சாஸ்தா மருத்துவமனைக்கு எனது கணவரும் அவரது நண்பரும் அழைத்துச் சென்றனர். "அதன்பின்னர் எனது மகனுக்கு ரத்தத்தில் நோய் தொற்று இருப்பதாகக் கூறி 30 நாட்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவன் வீடு திரும்பியபோது வயிற்றில் தையல் இருந்தது. இது எப்படி வந்தது என்று வேறு மருத்துவமனையில் சோதனை செய்தபோதுதான் அவனது சிறுநீரகம் திருடப்பட்டுள்ளது எனக்குத் தெரிந்தது," என்று கூறினார். இதுதொடர்பாக மருத்துவர் பழனிராஜன் கூறுகை யில், "நான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் செய்தேன். அந்த இளையரின் வீட்டில் ஒப்புதல் பெற்ற ஆவணங்களைச் சோதனை செய்த பிறகுதான் அவரது சிறுநீரகம் எடுக்கப்பட்டது. சிறுநீரகம் பெற்றவருக்கும் அதை கொடுத்தவருக்கு ஏற்பட்ட பணப் பிரச்சினையால் இது நடந்திருக்கலாம்," என்றார்.