தினகரன்: நீதி கிடைக்கும் வரை போராடுவோம்  

மாணவர்களோடு களமிறங்கி பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைக்கும் வரை  அமமுக போராடும் என அக் கட்சியின் துணைப் பொதுச் செய லாளர் டிடிவி தினகரன் தெரி வித்துள்ளார்.
“பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுகவிற்கு தொடர் பிருப்பதாக தகவல்கள் வந்துள் ளன. மர்மங்கள் நிறைந்த பொள் ளாச்சி பாலியல் பயங்கரத்தில் உண்மை குற்றவாளிகளைப் பிடிப் பதை விட்டுவிட்டு, தமிழக அரசு காவல்துறையை ஏவி மாணவர் களைத் தாக்குவது, கல்லூரி களை மூடுவது போன்ற வேலை களில் ஈடுபட்டிருப்பது கடும் கண் டனத்திற்குரியது.  இதை அமமுக வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்காது. மாணவர்களோடு கள மிறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகப் போராடும்,” என தினகரன் தெரிவித்துள்ளார்.