சுடச் சுடச் செய்திகள்

பெண்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ள கும்பல் 

பொள்ளாச்சி: சினிமா படப்பிடிப்பு கள் நடந்து வரும் பொள்ளாச்சி மண்ணில் சினிமாவை மிஞ்சும் வகையில் நூற்றுக்கணக்கான பெண்களை வைத்து ஆபாசக் காணொளிகளை எடுத்து, அவர் களை மிரட்டி, தங்களின் இச் சைக்கு பணியவைத்து பொள் ளாச்சி நகரின் மானத்தையே வாங்கிவிட்டனர் என்று மக்கள் பலரும் கொந்தளித்துள்ளனர்.
பொள்ளாச்சியில் கைதான கும்பலிடம் சிக்கிய பெண் மருத் துவர்கள், ஆசிரியைகளை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பல கோடி ரூபாய் பறித்துள்ள தக வலும் வெளியாகி உள்ளது.  
இந்தக் கும்பல் குறித்து போலி சார் கூறியபோது,  “ஃபேஸ்புக் மூலமும் தனது நண்பர்கள் மூல மும் சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் கைபேசி எண்ணை வாங்கி விடுவார்கள். பின்னர் சரளமாக நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் சபரிராஜன் பெண்களைத் தன் வலையில் வீழ்த்திவிடுவார்.
“பொறியியலாளரான சபரி ராஜன் ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் தோட்டத்து வீட்டுக்குப் பெண்களை சொகுசுக் காரில் அழைத்துச் செல்வார். 
“சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரை நான்கு நாட்கள் வரை தங்கவைத்தது தொடர்பில், அவரிடம் அவருடைய ஆபாசப் படத்தைக் காட்டி பல லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளனர். 
“இதுபோல் கோவையில் உள்ள ஒரு பல்கலைக்கழகப் பேராசிரிய ரும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவரது மனைவி யும் பள்ளி ஆசிரியர்களும் இந்தக் கும்பலிடம் சிக்கியுள்ளனர். 
“இந்தக் கும்பல் வசதியான வீட்டுக் குடும்பப் பெண்கள், கல் லூரி மாணவிகளைக் குறி வைத்தே இதில் ஈடுபட்டுள்ளது. 
“ஏனென்றால் பணக்கார வீட் டுப் பெண்கள் புகார் கொடுக்க வரமாட்டார்கள் என்ற தைரி யத் திலும் செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும் என்ற கோணத் திலும் இதில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஊடகம்
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon