குவியும் புகார்கள்; கொந்தளிப்பில் தமிழகம்

திருச்சி: பொள்ளாச்சியில் பெண் களைச் சீரழித்தது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தீவிர நடவடிக் கையும் கடும் தண்டனையும் வேண்டும் என கோரி கல்லூரி மாணவர்கள் கொதித்து எழுந்துள் ளனர். அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப் பட்டது. இருந்தபோதிலும் தஞ்சை, மதுரை என பல்வேறு இடங்களில் நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் கொடூரச் சம்பவத்தைக் கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட் டம் நடத்தினார்கள். அப்போது குற்றவாளிகள் 4 பேரின் படங்கள் இடம்பெற்ற பதாகைகள் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்தப் பதாகை அருகில் கையில் துடைப்பக்கட்டைகளுடன் வந்த னர். 4 பேரின் உருவப்படத்தின் மீதும் துடைப்பத்தால் ஆவேசமாக அடித்தனர். பின்னர் செருப்பாலும் அடிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத் தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் எனவும் புகார் தெரி விப்பவர்கள் பெயர், விவரம் ரகசி யம் காக்கப்படும் எனவும் சிபிசிஐடி போலிசார் தெரிவித்து இருந்தனர்.
புகார் தெரிவிக்க 94884 42993 என்ற எண்ணையும் தெரி வித்து இருந்தனர். இந்த எண் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத் திலேயே 100க்கு மேற்பட்ட புகார் கள் சிபிசிஐடி போலிசாருக்குச் சென்றன. அவர்கள் பாலியல் பலாத்கார கும்பல் மீது பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின் றனர் என்றனர் போலிசார்.
இதற்கிடையே திமுக மகளிர் அணி மாநில செயலாளர் கனி மொழி எம்.பி. தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறும்போது, “ஏழு ஆண்டுகளாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற சூழலில் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட் டுள்ளனர். விசாரணையில் எந்த பெண் அதிகாரியும் ஈடுபடுத்தப்பட வில்லை. இது பல கேள்விகளை எழுப்பக்கூடியதாக உள்ளது.  
“போலிசும் அரசும் யாரை காப்பாற்ற நாடகம் நடத்திக் கொண்டு இருந்தார்கள் என்பது முக்கியமான கேள்வி. பாதிக்கப் பட்ட பெண்கள் வந்து புகார் தெரி விக்கும் வகை யில் தனியாக நீதிமன்றம் ஏற்படுத்தப்பட வேண் டும்,” என்றார்.