பேசாமலே பிரசாரம் செய்வார் விஜயகாந்த்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார் என்றும் ஆனால் எதுவும் பேச மாட்டார் என்றும் அக் கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித் துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டி யளித்த சுதீஷ், விஜய காந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். பேசாவிட் டாலும் விஜயகாந்த் வந்தாலே போதும் என்றும் தெரி வித்து இருக்கிறார். 
அதிமுக - பாஜக கூட்டணியில் கேட்ட எண்ணிக் கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும் விரும்பிய தொகுதிகள் கிடைத்திருப்பதாக சுதீஷ் கூறியுள்ளார். எட்டு மக்களவைத் தொகுதிகள், ஒரு மேலவை இடம் ஆகியவற்றைக் கேட்டும் கிடைக்க வில்லை என்றபோதிலும் தாங்கள் விரும்பிய வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் விருது நகர் ஆகிய தொகுதிகள் கிடைத்து இருப்பதாக சுதீஷ் கூறியுள்ளார். பாஜக தங்களுக்கு சில வாக் குறுதிகளை அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித் துள்ளார்.