மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை தொகுதி கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசன் மதுரையில் போட்டியிடுவார் என்றும் கோவையில் பிஆர் நட ராஜன் போட்டியிடுவார் என் றும் மார்க்சிஸ்ட் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்தார்.  ‘காவல்கோட் டம்’ புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற வேட்பாளர் சு.வெங்கடேசன், 48, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளராக உள்ளார்.
மற்றொரு கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக் கப்பட்ட ராமநாதபுரம் தொகு தியில் நவாஸ் கனி போட்டி யிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது.