ரூ. 46 லட்சம் தங்கம் கடத்தல்

ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அகமதாபாத்தில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உள்நாட்டு முனையத்தில் அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் விசாரித் தனர். முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் அவரது உடை மைகளைச் சோதனை செய்தனர். அதில் மறைத்துவைக்கப்பட் டிருந்த ரூ.46 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். அவரைக் கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, கொழும்பிலிருந்து  சென்னை சென்ற விமானத்தில் தங்கம் கடத்தி வந்த வாலிபர் சென்னையில் இறங்கவில்லை. அதே விமானம் உள்நாட்டு விமானமாக அகமதாபாத் சென்று திரும்பியபோது சென்னையில் இறங்கியது தெரியவந்தது.