திமுக கூட்டணி தொகுதிகள்: ஸ்டாலின் அறிவித்தார்

சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகள் போட்டியிடும் மக்களவைத் தொகுதிகளின் பட்டி யலை கூட்டணியின் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் (படம்) நேற்று அறிவித்தார்.
சென்னையிலுள்ள மூன்று தொகுதி களையும் கூட்டணிக் கட்சிக்குத் தரா மல் திமுகவே போட்டியிடுகிறது.
பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தலை சந்திக்கிறது.

“இந்தக் கூட்டணி, பேரத்தின் அடிப்படையில் உருவானது அல்ல. கொள்கையின் அடிப்படையில் உரு வாகி இருக்கிறது. எங்கள் கூட்டணி மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக் கிறது. திமுக வேட்பாளர் பட்டியல் (நாளை) 17ஆம் தேதி வெளியாகும். அதே நாளில் 18 சட்டமன்றத் தொகுதி களுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும். திமுக தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது. நாடாளு மன்றத் தேர்தலுக்கு தனியாகவும் சட்ட சபை இடைத் தேர்தலுக்கு தனியாகவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள் ளது. 4 அல்லது 5 நாட்களில் அவை வெளியிடப்படும்.

“தேர்தல் ஆணையம் 18 தொகுதி களுக்கான சட்டமன்ற இடைத்தேர் தலை அறிவித்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என் பதுதான் குறிக்கோள். இதற்காக நீதி மன்றத்தை நாடினோம். ஆனால் ஆளுங்கட்சி தரப்பில் இரு வார அவ காசம் வாங்கி உள்ளனர். பொறுத்து இருந்து பார்ப்போம்.
“கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் புதன்கிழமை ஒரேமேடை யில் பங்கேற்றோம். அதுபோல் இனி வரும் பிரசாரக் கூட்டங்களிலும் ஒன் றாக பங்கேற்க வாய்ப்புள்ளது. விடு தலைச் சிறுத்தைகள் கட்சியினர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதை அவர்களே அறிவிப்பார்கள்,” என்றார் ஸ்டாலின்.