சுடச் சுடச் செய்திகள்

நாடாளுமன்றச் செயல்பாடு: தமிழக எம்.பி.க்கள் மோசம்

இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில்  வென்று நாடாளுமன்றம் சென்ற தமிழக எம்.பி.க்களின் செயல்பாடு பல அம்சங்களில் சராசரிக்கும் கீழ் என்ற அளவிலேயே இருந்தது டெல்லியைச் சேர்ந்த பிஆர்எஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில், கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த நாடாளு மன்றக் கூட்டத்தொடர்களில் தமிழக எம்.பி.க்களின் வருகைப் பதிவு 78%ஆக இருந்தது. இது சராசரியைவிட 2% குறைவு.
தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களில் 17 பேரின் வருகைப்பதிவு  இன்னும் மோசம் எனக் கூறப்பட்டது. எம்.பி.க்களில் ஒருவர்கூட 90 விழுக்காட்டைத் தாண்டவில்லை. 
வருகைப்பதிவைப் பொறுத்த மட்டில், 45 விழுக்காட்டுடன் ஆகக் கடைசி இடத்தில் இருப் பவர் முன்னாள் மத்திய அமைச்ச ரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon