ராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் கோரிக்கை

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உத்தரப் பிரதேச மாநி லத்தோடு மட்டும் அடைத்துவிடக் கூடாது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தமிழகத்திலும் ஒரு தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
“வடஇந்தியா, தென்னிந்தியா என இரு பகுதிகளாக இந்தியா பிளவுபட்டுக் கிடக்கிறது. பாரதிய ஜனதா தலைமையிலான கடந்த ஐந்தாண்டுகால தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சியில் இந்தப் பிளவு அதிகமாகிவிட்டது. இப்படி பிளவுபட்டுக் கிடக்கும் இந்தியாவை ஒன்றிணைக்க வேண்டுமெனில் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்,” என்று அழகிரி கூறி இருக்கிறார்.
தமது இந்தக் கோரிக்கையை  ராகுல் காந்தியிடம் முன்வைத் தீர்களா என்று அவரிடம் கேட்ட தற்கு, தமிழ்நாட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ராகுலுடன் சென்றபோது இவ்வேண்டுகோளை முன்வைத்ததாகத் தெரிவித்தார்.
“தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று நான் வேண்டிக் கொண்டதைக் கேட்டதும் அவர் புன்முறுவல் பூத்தார். நாளை நான் மீண்டும் அவரைச் சந்திக்க இருக் கிறேன். அப்போதும் அவரிடம் இதை வலியுறுத்துவேன்,” என்று அழகிரி கூறினார்.