சென்னை: தமிழ்நாட்டில் தேர்தலில் பணம் கொடுத்தால்தான் வாக்கு பெறமுடியும் என்ற நிலை ஏறக் குறைய நிலைப்பெற்றுவிட்டதை அடுத்து இரு பெரும் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் வாக்காளர் களை எதிர்எதிரான பாணிகளில் பணத்தால் அடிக்க முடிவு செய்து இருக்கின்றன. மூன்றாம் தரப்பினரை வைத்து வாக்காளர்களுக்குப் பணம் பட்டு வாடா செய்யும் முறையைக் கடைப்பிடித்தால் பணத்தை அந்த மூன்றாம் தரப்பினரே அமுக்கிவிடு கிறார்கள் என்பதை அனுபவ ரீதியாக கண்டிருக்கும் அதிமுக, இப்போது கட்சியினர் மூலம் நேரடி யாக பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகிக்க முடிவு செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், வாக்காளர் களுக்குச் சென்று சேரவேண்டிய பணத்தைச் சென்ற தேர்தலின் போது கட்சியினரே அமுக்கிவிட் டதைத் தெரிந்துகொண்ட திமுக, இத்தேர்தலில் மூன்றாம் தரப்பு மூலம் வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுக்க முடிவு செய்து இருப்பதாகத் தெரிவிக்கப் படுகிறது. அதேவேளையில், தங்கள் அணியில் இடம்பெற்றுள்ள கூட் டணிக் கட்சிகளிடம் பணத்தை ஒப்படைக்காமல் அந்தக் கட்சிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகளி லும் தாங்களே பணத்தைச் செலவு செய்ய அதிமுகவும் திமுகவும் முடிவு செய்து இருப்பதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இவை இப்படி இருக்க, தேர் தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கும் அமமுக, பெரும் பணத்தை வைத்துக்கொண்டு இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று களத்தில் குதிக்கிறது. குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றால் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கும் தினகரன் தரப்பு, பல பண வியூகங் களை வகுத்து வருவதாகக் கூறப் படுகிறது. பணத்தால் அடிக்க கட்சிகள் தயாராகும் நிலையில், தேர்தல் ஆணையமோ பணப்பட்டு வாடாவை அறவே ஒழிக்க களத் தில் மும்முரமாகக் குதித்துள்ளது. வாக்காளர்களோ, தங்கள் வாக் குக்கு எப்போது, எவ்வளவு பணம் கிடைக்கும் என்று ஆசையோடு காத்திருக்கிறார்கள்.
வாக்காளரை பணத்தால் அடிக்க கட்சிகள் பல தந்திரப்போட்டி
2 mins read

