அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப்போகின்றன என்பது தொடர்பான விவரங்கள் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. அதன்படி, அந்தக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அதிமுக 20 தொகுதி களில் போட்டியிடுகிறது. பாமக 7 தொகுதிகளிலும் பாஜக ஐந்து, தேமுதிக நான்கு தொகுதிகளிலும் மோதுகின்றன. அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்குத் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும் புதுச்சேரி தொகுதியில் இந்தக் கூட்டணி ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றும் நேற்று இந்தக் கூட்டணித் தலைவர்கள் அறிவித்தனர்.

அதன்படி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணா மலை, சிதம்பரம், பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, நாகப் பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை (தெற்கு) ஆகிய தொகுதிகளில் அதிமுக நிற்கிறது. அதேபோல, தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் பாமகவும் - கன் னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராம நாதபுரம், தூத்துக்குடி தொகுதிகளில் பாஜகவும் களத்தில் குதிக்கின்றன.