புதிய கட்சி தொடங்கிய  முன்னாள் பாமக பிரமுகர்

சென்னை:  பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகிய ராஜேஸ் வரி பிரியா புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததும் அதிருப்தி அடைந்த இருவர் அக்கட்சியி லிருந்து விலகினர்.
ஒருவர் ரஞ்சித், மற்றொருவர் ராஜேஸ்வரி பிரியா.
ரஞ்சித் அமமுகவில் சேர்ந்து விட்டார். ராஜேஸ்வரி பிரியா கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜேஸ்வரி பிரியா புதிய கட்சி யைத் தொடங்கி பலரை அதிர வைத்துள்ளார்.
அவரது கட்சியின் பெயர்: அனைத்து மக்கள் அரசியல் கட்சி. கட்சியின் கொடியையும் கொள்கைகளையும் வெளி யிட்டுள்ள அவர், வட சென்னை தொகுதியில் தானே களமிறங்கு வதாகவும் மயிலாடுதுறையில் இன்னொரு இளையரை கள மிறக்கப் போவதாகவும் தெரிவித் தார்.
“மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இந்திய இறையாண்மையின் ஆளு மைக்கு உட்பட்டு நடப்போம்,” என்று அவர் உறுதி தெரிவித் துள்ளார்.