பாமக, தேமுதிக பங்கேற்காததால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு

சென்னை: அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகு திகள் பற்றி அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் பாமகவும் தேமுதிகவும் பங்கேற்காததால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
பாமக, தேமுக கேட்ட தொகுதி கள் ஒதுக்கப்படாததால் இரு கட்சிகளும் அதிருப்தி அடைந் துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் அதிமுகவுடன் பாமக, பாஜக, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என். ஆர். காங்கிரஸ், தேமுதிக, புதிய தமிழகம் உள் ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத் துள்ளன.
பாமகவுக்கு ஏழு தொகுதிகளும் தேமுதிகவுக்கு நான்கு தொகுதி களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக இருபது தொகுதி களில் போட்டியிடுகிறது. பாஜக வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய வற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று தனியார் ஹோட்டலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகு திகள் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக் கூட்டத்தில் அதிமுக, பாஜக தலைவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகி யோரும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலாளர் எச். ராஜா ஆகியோரும் போட்டி யிடும் தொகுதிகளை அறிவித் தனர். ஆனால் இதில் பாமக, தேமுதிக தலைவர்களோ பிரதிநிதி களோ பங்கேற்கவில்லை. பாமக வும் தேமுதிகவும் கேட்ட தொகுதி களை அதிமுக கொடுக்காததால் இவர்கள் இருவரும் பங்கேற்க வில்லை என்று கூறப்படுகிறது.
தென்சென்னை, ஆரணி தொகுதிகளை பாமக கேட்டிருந் தது. ஆனால் இந்த இரு தொகுதி களில் அதிமுக போட்டியிடுகிறது.
மேலும் பாமக கேட்ட கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிக வுக்கு ஒதுக்கப்பட்டது. இதேபோல தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ண கிரி ஆகிய தொகுதிகளை தேமு திக கேட்டது. ஆனால் அவற்றில் தருமபுரியும் அரக்கோணமும் பாம கவுக்கு ஒதுக்கப்பட்டது. கிருஷ்ண கிரி தொகுதியும் தேமுதிகவுக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள இரு கட்சிகளும் கூட்டத்தை புறக் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பாமக, தேமுதிக பங்கேற்காதது குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தேமுதி கவும் பாமகவும் ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டில் கையெழுத் திட்டுவிட்டதால் இன்று வர வில்லை," என்று நேற்று கூறினார்.
"இதுவரை தொகுதிப்பங்கீட்டில் கையெழுத்திடாத பாஜக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே இன்று பங் கேற்றன. அதிமுக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது, விமரிசை யாக வெற்றி பெறுவோம்," என்றும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!