அமமுக வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியீடு

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்ட மன்ற இடைத்தேர்தலிலும் போட்டி யிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார்.
முதல் பட்டியலில் 24 நாடாளு மன்றத் தொகுதிகள் மற்றும் 9 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சட்டசபை இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மீண்டும் அவரவர் தொகுதிகளில் போட்டியிடுவதா கவும் டிடிவி தினகரன் கூறினார்.
நாடாளுமன்றத் தொகுதிகள்: திருவள்ளூர்-பொன். ராஜா, இசக்கி சுப்பையா-தென்சென்னை, ஸ்ரீபெரும்பதூர்-ஜி. தாம்பரம் நாரா யணன், காஞ்சிபுரம்-முனுசாமி, விழுப்புரம்- வானூர் என் கணபதி, நாமக்கல்-பிபி சாமிநாதன், ஈரோடு - கேசி செந்தில் குமார், நெல்லை -ஞான அருள் மணி, கரூர் - என் தங்கவேல், திருச்சி - சாருபாலா தொண்டைமான், பெரம்பலூர்- எம். ராஜசேகரன், சிதம் பரம்- ஏ.இளவரசன், மயிலாடு துறை-எஸ் செந்தமிழன், நாகப் பட்டினம்- செங்கொடி, தஞ்சாவூர் -முருகேசன், சிவகங்கை- தேர் போகி வி பாண்டி, மதுரை- டேவிட் அண்ணாதுரை, ராமநாத புரம்- வது.ந ஆனந்த், தென்காசி - ஏஎஸ் பொன்னுத்தாய், திருநெல் வேலி-ஞான அருள் மணி, நீலகிரி -எம். ராமசாமி, திருப்பூர்- செல் வம், கோவை - அப்பாதுரை, பொள்ளாச்சி - முத்துக்குமார்.
சட்டசபை இடைத்தேர்தல் வேட் பாளர்கள்: திருப்போரூர் - கோதண்டபாணி, குடியாத்தம் (தனி)-ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர்-பாலசுப்பிரமணி, அரூர் (தனி)-முருகன், மானாமதுரை (தனி)-மாரியப்பன் கென்னடி, சாத்தூர்-எதிர்கோட்டை சுப்ர மணியன், பரமக்குடி (தனி) - டாக் டர். முத்தையா, பூவிருந்தவல்லி (தனி)-ஏழுமலை, பெரம்பூர் - வெற்றிவேல்.
இதற்கிடையே நேற்று செய்தி யாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தொண்டர்கள் விருப்பப் பட்டால் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!