சென்னை: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையுடன் நேற்றுத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்து உள்ளதாகத் தெரிவித்துவிட்டு தொடர்பைத் துண்டித்து விட்டார். அதனை அடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன், பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் வீட்டில் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடந்தது. வெடிகுண்டு புரளி தொடர்பில் சுந்தரராஜன் என்பவர் கைதானார். அவர் மனநலம் இல்லாதவர் என்பது தெரியவந்தது.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சந்தேக நபர் கைது
1 mins read

