பழனிசாமி, பன்னீர் மீதான வழக்கு இன்று விசாரணை

புதுடெல்லி: அதிமுகவின் கொள்கை விதிகள் மாற்றப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதி களுக்குப் புறம்பானது என்பதால் வேட்பாளர்கள் வேட்புமனுவில் ஓ. பன்னிர்செல்வம், முதல்வர் பழனி சாமி இருவரும் கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்பி.யான கே.சி. பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
அவரின் கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை  அவசர வழக் காகக் கருதி அதை இன்று விசாரிப்பதாக டெல்லி உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது.