வாக்களிப்பு  நேரம் நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு விழுக்காட்டை அதிகரிக்கும் நோக்கத்தில், வாக்களிப்பு நேரத்தை நீட்டித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் ஏப்ரல் 18ல் சித்திரை திருவிழா அன்று வாக்குப்பதிவு நடப்பதால், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என்று அவர் அறிவித்தார். எனவே மதுரை தொகுதியில் காலை 7 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணி வரை மக்கள் வாக்கு அளிக்கலாம். 
மதுரை தவிர மற்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குப் பதில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். 
வாக்காளர்களில் அதிகம் பேர் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவ தாக தலைமை தேர்தல்  அதிகாரி தெரிவித்தார்.