கனிமொழி: தூத்துக்குடியில் தமிழிசையை சந்திக்க தயார்

சென்னை:  தூத்துக்குடி தொகுதி யில் பாஜக சார்பில் தமிழிசை போட்டியிட்டால் அவரைச் சந்திக்க தயார் என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித் துள்ளார். திமுக மேலவை உறுப் பினருமான கனிமொழி நேற்று சென்னையில் செய்தியாளர்களி டம் பேசினார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி காரணமாக தூத்துக்குடியில் சிறு தொழில்கள், வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் அங்கு பெண் களும் இளைஞர்களும் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருப் பதாகக் கூறிய கனிமொழி, அங்கு கிராமப்புற மக்களுக்குப் பல ஆண்டுகளாக அடிப்படை வசதி கள் கூட இல்லை என்றார்.
திமுகவில் கருணாநிதிக்கு நிகராக ஸ்டாலின் வழிகாட்டியாக பாடுபட்டுவருவதாகத் தெரிவித்த கனிமொழி, தூத்துக்குடி தொகுதி யில் பாஜக சார்பில் யார் நின் றாலும் அது தமிழிசையாக இருந் தாலும் சந்திக்க தான் தயார் என்றார். போட்டி கடுமையாக இருக்குமா என்று கேட்டதற்குப் பார்ப்போம் என்று அவர் கூறினார்.

பாஜகவின் மாநில தலைவி தமிழிசை, (இடது) கட்சி அனுமதித்தால் போட்டியிட தாம் தயாராக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். திமுக மேலவை உறுப்பினர் கனிமொழி சில ஆண்டுகளாகவே தூத்துக்குடியில் தனி கவனம் செலுத்தி வருகிறார். கோப்புப்படங்கள்