அதிமுக தேர்தல் அறிக்கை - அதிரடி உறுதிகள்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் புதிய வறுமை ஒழிப்புத் திட்டம் ஒன்றை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் இந்தியப் பொதுத்தேர்தலுக்கான அறிக்கையான இதனை அதிமுக தலைவர்கள் சென்னையில் இன்று வெளியிட்டனர். 

அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தைத் தமது கட்சி தீவிரத்துடன் செயல்படுத்தும் என்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஏழைகள், ஆதரவில்லாதவர்கள் ஆகியோருக்கு மாதத்திற்கு 1,500 ரூபாய் நேரடி பணமாற்றம் செய்யப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு குற்றவாளிகளை விடுதலை செய்வது, மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வுகளை நீக்குவது உள்ளிட்ட உறுதிமொழிகளையும் அதிமுக தனது அறிக்கை வாயிலாக தெரிவித்தது.