கருத்துக்கணிப்பு: திமுக கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றிபெறும்

அடுத்த மாதம் 18ஆம் தேதி தமிழகத்தில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் - விஎம்ஆர் மேற் கொண்ட புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
மொத்தமுள்ள 39 தொகுதி களில் 34 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றலாம் என அந்தக் கருத்துக்கணிப்பு தெரி வித்துள்ளது. புதுச்சேரியிலும் அக்கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இது சாத்தியமானால், 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு களின் தலைகீழ் மாற்றமாக இருக் கும். ஐந்து ஆண்டுகளுக்குமுன் நடந்த பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இம்முறை பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கும் அதிமுக 20 இடங் களில் மட்டுமே வேட்பாளர்களைக் களமிறக்குகிறது. மற்ற தொகுதி களில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதேபோல, திமுகவும் பாதி இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுத் தந்துள்ளது.
முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லா மல் இரு முக்கிய திராவிடக் கட்சிகளும் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
தேசிய அளவில் பார்க்கும் போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 
283 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறு கின்றன.
காங்கிரஸ் கூட்டணி 135 இடங்களிலும் பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இணையாத மற்ற மாநிலக் கட்சிகள் 125 தொகுதி களிலும் வெல்லும் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.