அதிகாலையில் வேனில் சிக்கிய ரூ.3.6 கோடி மர்ம நகைகள்

மதுரை: மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி டோல்கேட் பகுதியில் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலிசார் நேற்று அதி காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அதிகாலை 4.30 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த வேன் ஒன்றை மறித்த அதிகாரிகள் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். 
அவர் முன்னுக்குப்பின் முர ணான தகவல் தெரிவித்ததை யடுத்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வேனைத் திறந்து சோதனை செய்தனர்.
அப்போது அதில் 8 கிலோ தங்கம், வைரம், வெள்ளி கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து ஆவணங்கள் கேட்டபோது ஓட்டுநரிடம் எந்த பதிலும் இல்லை.
இதையடுத்து அதிகாரிகள் வேனையும் தங்கம், வெள்ளி, வைரம் ஆகிய ஆபரணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்குக் கொண்டு சென்றனர்.
தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான  நடராஜனும் வரு மான வரித்துறை அதிகாரிகளும் கைப்பற்றப்பட்ட ஆபரணங்களை ஆய்வு செய்தனர்.  பின்னர் ஆட்சியர் நடராஜன் செய்தியாளர் களிடம் கூறுகையில், “பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.3.64 கோடி. ஓட்டுநரிடமிருந்த ஆவணங்களைச் சோதனை செய் ததில் கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்வதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால் மதுரைக்கு ஏன் கொண்டுவரப்பட்டது? என தெரியவில்லை. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிக ளும் போலிசாரும் விசாரித்து வரு கின்றனர்,” என்றார்.