சத்யராஜ் மகளின் திடீர் சந்திப்பு

சென்னை: ஊட்டச்சத்து நிபுணராக இருக்கும் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித் துப் பேசினார். இதுகுறித்து திவ்யா சத்யராஜ் கூறுகை யில், “நீண்டகாலமாக இரு வரது குடும்பமும் நட்புற வில் இருந்து வருகிறது. இந்த உறவு கலைஞர் படத் தில் எனது அப்பா நடிக்கும்போதிருந்தே நீடித்து வருகிறது.  ஸ்டாலின் மீதும் அவரது அரசியல் பயணத்தின் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது. எனக்கும் அரசியல் ஆர்வம் இருக்கிறது. ஆனால், இந்தச் சந்திப்பின்போது நாங்கள் அரசியல் பேசவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.