நீதிபதியின் கண்முன்னே பெண்ணுக்கு கத்திக்குத்து

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் கணவன், மனைவி உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் கள், விவாகரத்து உள்ளிட்ட வழக்குகள் விசாரிக்கப்படுவது வழக்கம். 
அந்த வகையில், ஸ்ரீபெரும் புதூரைச் சேர்ந்தவர் சரவணன், மாநகரப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவ ருக்கும் இவரின் மனைவி வர லட்சுமிக்கும் இடையே குடும்பத்  தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பான வழக்கு முதலா வது கூடுதல் குடும்பநல நீதி
மன்றத்தில் கடந்த ஐந்தாண்டு களாக நடைபெற்று வந்தது. 
இந்த நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்காக இரு வரும் நேற்று நீதிமன்றம் வந்த னர். வழக்கு விசாரணைக்கு வரும் முன்னர் நீதிமன்ற அறை யில் இருவரும் ஒன்றாக அமர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசி னர். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதம் சண்டையாக மாறியது.
யாரும் எதிர்பாராத நேரத்தில் சரவணன் தம் மனைவி வர லட்சுமியின் நெஞ்சின் மீது கத்தி யால் குத்தினார். நீதிபதி இளங் கோவன் முன்னரே இந்தச் சம்ப வம் நடந்துள்ளது. 
உடனே அங்கிருந்த காவலர் கள் சரவணனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கடுமையான காயத்துக்குள்ளான வரலட்சுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கத்திக்குத்தை நேரடியாகப் பார்த்த நீதிபதி இளங்கோவன், சுமார் 30  நிமி டங்கள் வரை பேச்சுவார்த்தை இன்றி உறைந்து போனார்.