பவர் ஸ்டாரும் ஒரு வேட்பாளர்

சென்னை: பிரபல நகைச் சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் (படம்), நாடாளு மன்றத் தேர்தலில் போட்டி யிட உள்ளதாக அறிவித் துள்ளார். தென்சென்னைத் தொகுதியில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் தாம் போட்டியிட உள்ளதாக அவர் கூறி உள்ளார். “நான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி. வெற்றியடைந்து மக்கள் பணி செய்ய காத் திருக்கிறேன்,” என்று பவர் ஸ்டார் தெரிவித்துள்ளார்.