சுடச் சுடச் செய்திகள்

வழக்கு நீங்கியதால் தேர்தலுக்கு தயாரானது ஒட்டப்பிடாரம் 

சென்னை: ஒட்டப்பிடாரம் சட்ட மன்றத் தொகுதியில் கடந்த 2016 அதிமுக சார்பில் ஆர்.சுந்தர ராஜன் போட்டியிட்டு வெற்றிபெற் றார். அவரை எதிர்த்துப் போட்டி யிட்ட புதிய தமிழகம் கிருஷ்ண சாமி மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 
இந்நிலையில் சுந்தரராஜனின் வெற்றியை எதிர்த்து கிருஷ்ண சாமி தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தார். இதனை யடுத்து அதிமுக எம்எல்ஏ சுந்தர ராஜன் டிடிவி தினகரன் அணிக்குத் தாவியதால் அவரது பதவி பறிபோனது. அதனால் ஒட்டப்பிடாரம் தொகுதியும் காலி யாக உள்ளது என அறிவிக்கப்பட் டது. 
இந்நிலையில், ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று திரும்பப் பெற் றார். கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது. வழக்கு இருந்ததால் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படா மல் இருந்தது. தற்போது தடை விலகி இடைத்தேர்தலுக்குத் தயாராகிவிட்டது இத்தொகுதி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon