தமிழகத்தின் பெரிய கட்சிகள் இம்முறை மூன்று பெண்களை மட்டுமே நாடாளுமன்ற வேட்பாளர்களாக அறிவித்துள்ளன. திமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கப்பாண்டியன், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் மறைந்த திமுக தலைவர்களின் வாரிசுகள். அதிமுக சார்பில் காஞ்சிபுரம் வேட்பாளராக மரகதம் குமரவேல் நிறுத்தப் பட்டுள்ளார். 2014 தேர்தலிலும் வென்ற மரகதம் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத் தில் வேலை செய்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, சாதாரண பெண் எவரும் இக்கட்சிகளின் வேட்பாளர்களாக்கப்பட வில்லை. இவ்விரு கட்சிகளோடு கூட்டணி அமைத்துப் போட்டியிடும் பாமக, தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இன்னும் சில உதிரிக்கட்கள் ஆகிய எதுவும் பெண்களுக்கு வாய்ப்பு தரவில்லை. தேசிய கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இவ் விரு கட்சிகளின் சார்பில் தலா ஒரு பெண் போட்டியிடலாம் எனக் கூறப்படு கிறது. பாஜக சார்பில் தமிழிசையும் காங்கிரசில் ஜோதிமணியும் களமிறக் கப்படலாம் என்றாலும்கூட ஒட்டுமொத்த பெண் வேட்பாளர் எண்ணிக்கை கடந்த மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் குறைவுதான் என டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்து உள்ளது.
2014 தேர்தலில் அதிமுக சார்பில் ஐந்து பெண்களைக் கறமிறக்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் சார்பில் ஏழு பெண்கள் என மொத்தம் 11 பெண் வேட் பாளர்கள் அந்தத் தேர்தலில் போட்டி யிட்டனர். தென்காசி-வசந்தி முருகேசன், திருப்பூர்-சத்யபாமா, திருவண்ணாமலை-வனரோஜா, காஞ்சிபுரம்-மரகதம் குமரவேல் ஆகிய நான்கு அதிமுக பெண் வேட்பாளர் களும் வெற்றி பெற்றனர்.
பெண்ணுரிமைப் பேச்சு காற்றோடு போச்சு
21 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2019 10:32
அண்மைய காணொளிகள்

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க