அதிமுக, திமுகவில் போட்டியிடும் வாரிசுகள்

சென்னை: அதிமுகவிலும் திமுக விலும் அரசியல் வாரிசுகள் போட்டியிடுகின்றனர்.
அதிமுக 20 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும்  போட்டியிடு கின்றன. திமுக 20 தொகுதி களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் அதிமுக, திமுக வேட்பாளர் பட்டியலில் வாரிசுகள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
திமுகவில் கருணாநிதி மகள் கனிமொழி (தூத்துக்குடி), பேரன் தயாநிதி மாறன் (மத்திய சென்னை), திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் (வேலூர்), முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி மகன் கௌதம் சிகாமணி (கள்ளக் குறிச்சி), ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி (வட சென்னை), தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய ஆறு வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.
இதேபோல அதிமுகவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ப. ரவீந்திரநாத் குமார் (தேனி), சட்டமன்ற முன் னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் மகன் பி.எச்.மனோஜ் பாண்டியன் (திருநெல்வேலி), அமைச்சர் டி.ஜெயக்குமார் மகன் ஜெ. ஜெயவர்தன் (தென் சென்னை), எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மகன் விவிஆர் ராஜ் சத்யன் (மதுரை) ஆகிய நான்கு வாரிசுகளுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளன.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதைத் தற்காத்து பேசியுள்ளன.
‘திமுகவில் இருப்பது குடும்ப வாரிசுகள் அல்ல; கொள்கை வாரி சுகள்’ என திமுக நாளிதழில் விளக்கம் அளிக்கப்பட்டது.
“வாரிசுகள் என்பதற்காக மட்டும் வேட்பாளர் பட்டியலில் இடம் தரப்படுவதில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றுவதால் தான் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,” என்றும் திமுக தெரிவித்துள்ளது.
இதேபோல அதிமுகவைச் சேர்ந்த துணைமுதல்வர்  ஓ. பன்னீர்செல்வம், அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை. தகுதியான வேட்பாளர்களை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள னர்,” என்றார்.