அண்ணா பல்கலையின் 37 ஊழியர்கள் நீக்கம்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்  விடைத் தாள் முறைகேடு தொடர்பில் 37 தற்காலிக பணியாளர்கள் நீக்கப் பட்டனர். 
2017 நவம்பர், டிசம்பர் 2வது பருவத் தேர்விலும் 2018 பிப்ரவரி, மார்ச் மறு தேர்விலும் வினாத்தாள் முன்னதாக வெளியானது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் பல கட்டங்களாக விசாரணை நடத்தியது.
அதில் தேர்வு எழுதிய மாண வர்களிடம் ரூ. 15,000 முதல் ரூ. 40,000 வரை பணம் பெற்றுக் கொண்டு கேள்வித்தாள்,  அதற் கான பதிலை எழுதுவதற்கான விடைத்தாளையும் குற்றம் சாட்டப்பட்டுள்ள தற்காலிக ஊழியர்கள் கொடுத்துள்ளனர். பின்னர் விடைத்தாளில் பதில் எழுதப்பட்டவுடன் அவற்றை விடைத்தாட்களுக்கு இடையில்  அவர்கள் நுழைத்துள்ளனர் என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்தது. 
குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த 37 தற்காலிக பணியாளர் களும் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
இவர்கள் சென்னை, மதுரை, சேலம் உட்பட ஏழு மண்டலங் களில் பணியாற்றி வந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.