சுடச் சுடச் செய்திகள்

மோடி அரசின் கீழடி மோசடி என்று தமிழிசை  டுவிட்டரில் பதிவிட்டதால் பாஜகவினர் அதிர்ச்சி

சென்னை: கீழடி பெயரில் மோடி அரசு மோசடி நடத்திவருவதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்பட்டு அருங்காட்சியகமும் அமைக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டரில் கருத்து வெளி யிட்டார். அதில், “கீழடி ஆய்வு மீண்டும் துவங்கும்....திமுக..... யார் நிறுத்தினார்கள்? மோடி அரசு தொடர்ந்து நடத்தி வரும் கீழடி பெயரில் மோசடி,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 
கீழடி பெயரில் மோடி அரசு மோசடி செய்து வரும் பொருளில் அது அமைந்துள்ளது பாஜகவி னரை அதிர்ச்சி அடைய செய்துள் ளது. இதையடுத்து தமிழிசையின் கருத்துக்கு வலைப்பதிவாளர்கள் கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் தமிழிசையின் இந்தத் தவறான கருத்து டுவிட்டர் பதிவில் பின்னர் காணவில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon